இந்திராகாந்தி நினைவு வீடு கட்டும் திட்டப் பணியில் மோசடி-அதிகாரி கைது !
மன்னார்குடி: இந்திராகாந்தி நினைவு வீடு கட்டும் திட்டப்பணியில் நீடாமங்கலம் யூனியன் அலுவலக முன்னாள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செக் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் யூனியன் அலுவலகத்தில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ராம்குமார் (48) என்பவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார்.
இவர் பணியின் போது செக் மோசடி செய்திருப்பதை அறிந்த திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்தது. அதன் பிறகு அரசியல் செல்வாக்கு மூலம் அவர் மீண்டும் நீடாமங்கலம் யூனியனில் பணியில் சேர்ந்தார்.
இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் ரூபாய்க்கு தனது பெயரில் செக்கை பூர்த்தி செய்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் போட வேண்டிய கையெழுத்தை, ராம்குமாரே போட்டுக் கொண்டு வங்கியில் பணம் மாற்ற சென்றார்.
கையெழுத்து மாறி இருப்பதை அறிந்த வங்கி நிர்வாகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு கேட்ட போது , ராம்குமார் மோசடி கையெழுத்து போட்டிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமாரை நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தி கைது செய்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications