'நீதியின் கதி என்னாவது?'-முரசொலியின் மறைமுக பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

மதுரை: நீதியின் கதி என்னாவது? என்ற தலைப்பில் சிஆர்பிஎப்பின் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள தமிழக மூத்த ஐபிஎஸ் அதிகாரியான விஜயக்குமாரை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி மறைமுகமாக சாடியுள்ளது.

இதுகுறித்து முரசொலியில் கூறப்பட்டுள்ளதாவது...

தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மத்திய அரசில் ஒரு குறிப்பிட்ட பதவியை அடைய வேண்டுமென்பதற்காக முதலமைச்சரை அணுகினார். முதலமைச்சரும் அந்தப் போலீஸ் அதிகாரி திறமையானவராயிற்றே என்ற எண்ணத்தில் பரிந்துரை செய்தார்.

எனினும், குறிப்பிட்ட பதவி அவருக்குக் கிடைக்கவில்லை. மாறாக, வேறொரு பதவியில் தலைநகரத்தை விட்டு வெளி மாநிலம் ஒன்றில் அவர் அமர்த்தப்பட்டார்.

அந்தப் பதவியில் அமர்ந்தது முதல், தான் முதலில் விரும்பிய பதவியை அடையவேண்டும் என்பதற்காக பல்வேறுவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு, கடைசியில் அந்தக் குறிப்பிட்ட பதவியிலிருந்த ஒரு அதிகாரியை வேறொரு பதவிக்கு அனுப்பிவிட்டு, அந்தப் பதவியில் அவர் தற்போது அமர்ந்துவிட்டார்.

தமிழகத்தில் முதல்முறையாக, ஒரு பெண்மணி தலைமை அதிகாரியாக வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முதலமைச்சர் முடிவு எடுத்தார்.

ஆனால் அந்த முடிவினால், தனக்கு பாதிப்பு ஏற்பட்டதாகச் சொல்லி, மற்றொரு உயரதிகாரி நீதிமன்றத்தை நாடினார். அவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஆட்சிக் கட்சியாக இருந்த அ.தி.மு.கவுக்கு அனுசரணையான அதிகாரி என்று பெயர் எடுத்ததால்; தேர்தல் ஆணையமே அவரை வேறொரு பதவிக்கு மாற்றுமாறு உத்தரவிட்டது.

நீதிமன்றத்திற்குச் சென்ற அந்த அதிகாரிக்கு ஆதரவாக மத்திய அரசு பதவிக்குச் சென்ற அந்த அதிகாரியும் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தமிழகத்தின் உயர் பதவியை நிரப்பும்போது, தன்னுடைய பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அப்படி நீதிமன்றத்தில் இங்கே குறிப்பிட்டவர், அங்கே குறிப்பிட்ட பதவியை அடைவதற்காக மற்றொருவரை வேறொரு பதவிக்கு அனுப்பிவிட்டு, தற்போது அந்தப் பதவியைப் பெற்றிருக்கிறார்.

உயரதிகாரிகளும், சந்தர்ப்பத்திற்கேற்றவாறு இங்கே ஒருவாதம், அங்கே ஒருவாதம் என்ற ரீதியில் போனால், நீதியின் கதி என்னாவது என்று முரசொலி கூறியுள்ளது.

முரசொலியில் கூறப்பட்டுள்ள அந்தப் பெண் அதிகாரி லத்திகா சரண் என்பதும், அவருக்கு டிஜிபி பதவி கொடுத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர் டிஜிபி நடராஜ் என்பதும், அவருக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் மனு செய்தவர் விஜயக்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+