நெல்லை ரயில் திருச்சி அருகே தடம் புரண்டது-உயிர்ச்சேதம் இல்லை
Subscribe to Oneindia Tamil
திருச்சி: சென்னையிலிருந்து நெல்லை சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி அருகே லால்குடியில் இன்றுஅதிகாலையில் தடம் புரண்டது. இருப்பினும் இதில் பயணிகள் யாருக்கும் ஆபத்தில்லை.
லால்குடி அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது அதிகாலை 2.15 மணியளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இதையடுத்து ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்தனர்.
ரயில் தடம் புரண்டதால் பயணிகள் யாரும் காயமடையவில்லை. வேறு எந்த ஆபத்தும் இல்லை.
ரயில் தடம் புரண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது சதி வேலையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த விபத்தால், தென் மாவட்டங்களுக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டக்கது. பாண்டியன் எக்ஸபிரஸ் ரயில் லால்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications