Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமருடன் அத்வானி சந்திப்பு-கர்நாடக ஆளுநரை நீக்க கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக ஆளுநர் பரத்வாஜை நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடு்த்தார்.

கர்நாடககத்தில் 11 பாஜக எம்எல்ஏக்களின் பதவி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கி்ன் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதே போல 5 சுயேச்சை எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான மனு மீதான விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

முதல்வர் எதியூரப்பா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக 11 பாஜக எம்எல்ஏக்களும், 5 சுயேச்சை எம்எல்ஏக்களும் கர்நாடக ஆளுநர் பரத்வாஜிடம் அக்டோபர் 6ம் தேதி மனு அளித்தனர்.

இதையடுத்து, அவர்கள் 16 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை நடவடிக்கை எடுத்தார் சபாநாயகர் போப்பையா. அரசு மீதான நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கும் முன் அவர்களது எம்எல்ஏ பதவியை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 16 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் ஹேகர், நீதிபதி என்.குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.

எதியூரப்பா சார்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் சோலி சொராப்ஜி ஆஜராகி வாதாடினார். 16 எம்எல்ஏக்கள் சார்பில் பி.சி.ராவ் உள்பட சில வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பாஜக எம்எல்ஏக்கள் 11 பேர் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

5 சுயேச்சை எம்எல்ஏக்கள் மனு மீதான விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்கு ஒத்தித்தனர்.

இதனால் நாளை சட்டசபையில் நடைபெறவுள்ள 2வது நம்பி்க்கை வாக்கெடுப்பிலும் இவர்கள் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் வாக்கெடுப்பில் வென்று விடலாம் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது.

எம்எல்ஏக்கள் பதவி நீக்கத்தால் இப்போது கர்நாடக சட்டசபை உறுப்பினர் பலம் 224 என்பதிலிருந்து 208 ஆகக் குறைந்துள்ளது.

இதில் பாஜகவுக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க 106 பேர் தேவை. தற்போது பாஜகவிடம் 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் சபாநாயகர் கணக்கில் வர மாட்டார். தேவைப்பட்டால் அவரும் வாக்களிக்க முடியும். அப்படி வரும்போது அவர் பாஜகவுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார் என்பதால் 106 பேரின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது.

எனவே நாளைய வாக்கெடுப்பிலும் பாஜக வெல்லும் என்ற நிலையே உள்ளது. அதேசமயம், அதிலும் ஒரு சிக்கல் வந்துள்ளது. மனப்பா வைஜால் என்ற எம்.எல்.ஏ நேற்று டெல்லியில் அத்வானி வீட்டில் வைத்து நடந்த கூட்டத்தின்போது கலந்து கொள்ளவில்லை. இதனால் பாஜக தரப்பு பீதியாகியுள்ளது.

வைஜால், மதச்சார்பற்ற ஜனதாதளத்தை நோக்கி நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அவரை போக விடாமல் தடுக்க தீவிர முயற்சிகளில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனராம்.

டெல்லியில் நேற்று நடந்த கூட்டத்தில் 105 பேரில் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். ஆப்சென்ட் ஆன ஐந்து பேரில் நான்கு பேர் வர முடியாததற்கான காரணத்தை விளக்கிக் கூறி கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், வைஜால் மட்டுமே சந்தேகக் கேஸாக உள்ளார்.

பாஜக தரப்பிலிருந்து மேலும் சிலரை விலைக்கு வாங்க காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் முயலலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அப்படி நடந்தால் விலை போகும் எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.

இன்னொரு பக்கம் ஜனாதிபதி ஆட்சி என்ற கத்தியும் எதியூரப்பா அரசின் தலை மீது தொடர்ந்து தொங்கிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு ஆதரவாக திரும்பியிருப்பதாக பாஜகர தரப்பு கூறுகிறது.

நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து எதியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவரான அமைச்சர் ஷோபா கூறுகையில், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெல்வோம். எங்களிடம் தேவையான ஆதரவு உள்ளது. நாங்கள் தோற்போம் என்று கூறுபவர்கள்தான் உண்மையில் தோற்கப் போகின்றனர் என்றார்.

பாஜக எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு:

இந் நிலையில் நாளை நடைபெறும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் முதல்வர் எதியூரப்பாவுக்கு அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்குமாறு பாஜக எம்எல்ஏக்களுக்கு கட்சி கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர்-சிதம்பரத்துடன் பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு:

இதற்கிடையே டெல்லி சென்றுள்ள கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள், அத்வானி தலைமையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கையும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சந்தித்து, தங்களுக்கு போதிய மெஜாரிட்டி இருப்பதாகவும், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் கர்நாடக ஆளுநர் பரத்வாஜை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரினர்.

இந்தக் குழுவில் எதியூரப்பா, பாஜக தலைவர்கள் வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரும் இடம் பெற்றனர்.

கவர்னர் பரத்வாஜ் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்றும் அவரைத் திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+