சிலி சுரங்கத்தில் சிக்கிய 33 பேரும் 68 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீ்ட்பு
சான் ஜோஸ் (சிலி): சில நாட்டின் சான் ஜோஸ் நகர சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்த 33 பேரும் 68 நாள் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உலகிலேயே அதிக நாட்கள் சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்தவர்கள் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
33 பேரில் கடைசி நபராக அந்தத் தொழிலாளர்கள் குழுவின் தலைவர்தான் கடைசியாக வெளியில்வந்தார். அவரது பெயர் லூயிஸ் அல்பர்டோ உர்சுவா. இவர்தான் 32 பேரையும் ஆறுதல்படுத்தி ஆறுதல் கூறியபடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியில் வந்த அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் அதைக் கொண்டாடினர். தங்களது குடும்ப உறுப்பினர்களை கட்டிப்பிடித்துக் கொண்டு சிலி நாட்டுக் கொடியை அசைத்தபடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
புதன்கிழமையுடன் இந்த மீட்புப் பணிகள் வெற்றிகரமாக முடிந்தன.
கிட்டத்தட்ட 2000 அடி ஆழ மலைப் பள்ளத்திற்குள் இவர்கள் அனைவரும்சிக்கிக் கொண்டனர். இவர்களை பத்திரமாக மீட்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இறுதி நடவடிக்கை சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நேற்றுடன் அது முடிவடைந்தது.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி இவர்கள் அனைவரும் சுரங்கத்தின் அடிப் பகுதிக்குப் போயிருந்தபோது திடீரென மலைப் பாறைகள் சறுக்கி சுரங்கத்தை மூடி விட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications