For Quick Alerts
For Daily Alerts
மலேசிய தமிழ்ப் பெண் டெல்லி விமான நிலையத்தில் மாரடைப்பால் மரணம்
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் மாரடைப்பால் மலேசியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண் மரணமடைந்தார்.
அவரது பெயர் கனகம் கதிரேசு. வயது 78. தனது மகன் பத்மநாதன் ஏ.சுப்ரமணியத்துடன் டெல்லியிலருந்து கோலாலம்பூர் திரும்பக் காத்திருந்தார். நேற்று இரவு 8 மணியளவில் விமான நிலைய பாதுகாப்புப் பகுதியில் அவர் காத்திருந்தபோது திடீரென கடும் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்து டாக்டர்கள் கனகத்தைப் பரிசோதித்தனர். அவசர கால சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. ஆனால் 8.50 மணியளவில் கனகம் உயிரிழந்தார்.
உடனடியாக அவரது உடல் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரவு 10.20 மணியளவில் விமானம் ஏறக் காத்திருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார் கனகம்.