'ஜெயலலிதாவைப் பார்த்தா பரிதாபமா இருக்கு!' - மு.க.அழகிரி பேட்டி

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று மாலை 5 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்:
மதுரையில் நடந்த அ.தி.மு.க. கண்டன கூட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?
அது அவர்கள் நடத்திய கூட்டம். அது பற்றி நான் எதற்கு கருத்து சொல்ல வேண்டும். அதை நான் விரும்பவில்லை.
மதுரை கூட்டத்தில் ஜெயலலிதா உங்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளாரே?
அரசியல் நாகரீகம் தெரியாமல் மேடையில் வந்து ஏதோ உளறி சென்றதற்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.
மதுரையில் அழகிரி ராஜ்ஜியம் நடப்பதாக ஜெயலலிதா கூறி உள்ளாரே?
யாரோ தப்புதப்பாக எழுதிக் கொடுத்ததை, சரியாக உள்ளதா என்று கூட விசாரிக்காமல் அந்த அம்மையார் அப்படியே 2 மணி நேரம் படித்துவிட்டு போயிருக்கிறார். ஒரு விதத்தில் அந்த அம்மையாரைப் பார்த்தா பரிதாபமா இருக்கு. யாராவது தவறாக சொன்னால் அதை நம்பக்கூடாது. உண்மையை விசாரித்துவிட்டு தான் முடிவு செய்ய வேண்டும். பேச வேண்டும்.
மதுரையை அ.தி.மு.க. கோட்டையாக மாற்றுவேன் என ஜெயலலிதா கூறி உள்ளாரே?
ஒருவேளை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற படத்தில் வரும் கதையை பற்றி கூட்டத்தில் பேசியிருப்பார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications