அமைச்சர், வாக்குச் சாவடி மீது தாக்குதல்-வன்முறையுடன் முடிந்த பீகார் 2ம் கட்ட தேர்தல்

மொத்தம் 45 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 98.44 லட்சம் வாக்காளர்கள் கலந்து கொண்டனர். 623 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களில்46 பேர் பெண்களாவர். ஆறு மாவட்டங்களில் நடைபெறும் இத்தேர்தலுக்காக 10,315 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
காங்கிரஸும், பகுஜன் சமாஜ் கட்சியும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆளும் ஐக்கிய ஜனதாதளம் 28 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான பாஜக 17 தொகுதிகளிலும் களத்தில் நிற்கின்றன.
லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் 34 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான பாஸ்வானின் லோக் ஜன சக்திக் கட்சி 11 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
ஷூகர் மாவட்டத்தில் ஆறு போலீஸாரை மாவோயிஸ்ட் நக்சலைட்கள் கொன்றுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
சித்தமார்கி மாவட்டத்தில் ருன்னிசயத்பூர் தொகுதியில் 166வது வாக்குச் சாவடிக்குள் திடீரென மாவோயிஸ்டுகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த வாக்குப் பதிவு இயந்திரத்தை தீவைத்துக் கொளுத்தினர். பிற தேர்தல் பொருட்களையும் அடித்து
நொறுக்கி சூறையாடினர்.
பின்னர் அங்கிருந்த 3 தேர்தல் பணியாளர்களை கடத்திச் சென்றனர். அதேபோல ஒரு அமைச்சரும் தாக்கப்பட்டார்.
வன்முறை நடந்த வாக்குச் சாவடிப் பகுதிக்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அதற்குள் மாவோயிஸ்டுகள் தப்பி விட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications