பாமகவில் தொடர் புறக்கணிப்பு-காங்.குக்குத் தாவுகிறார் டாக்டர் ராமதாஸ் சகோதரர்
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் சகோதரரான சீனிவாச கவுண்டரும், அவரது மகன் சந்திரசேகரனும், பாமகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைகின்றனராம்.
பாமகவைப் பொறுத்தவரை நம்பர் ஒன் டாக்டர் ராமதாஸ்தான். அதேபோல நம்பர் 2 அன்புமணி ராமதாஸ். இவர்களுக்கு அடுத்து பாமகவில் நிரந்தரப் பொறுப்புகளில் இருந்து வருபவர் ஜி.கே.மணி மட்டுமே. இவர்களைத் தாண்டி காடுவெட்டி குருவுக்கும் பாமகவில் அதிக முக்கியத்துவம் உண்டு.
இந்த நிலையில், பாமகவில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதால் அதிலிருந்து விலகி காங்கிரஸில் சேரப் போவதாக ராமதாஸின் சகோதரரான சீனிவாச கவுண்டரும், அவரது மகன் சந்திரசேகரனும் கூறியுள்ளனர்.
ப.சிதம்பரம் கோஷ்டியில் இணைகிறார்கள்:
இவர்கள் காங்கிரஸில் ப.சிதம்பரம் கோஷ்டியில் இணைகிறார்கள். இதுகுறித்து சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நானும், எனது தந்தையும் பா.ம.க. கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சிக்காக உழைத்து வந்தோம். எந்த வித பதவியையும் எதிர்பார்க்கவில்லை. கட்சித்தலைமை தொடர்ந்து எங்களை புறக்கணித்து வருவதாலும், கட்சி நடவடிக்கையில் இருந்து ஓரங்கப்பட்டு வருவதாலும் இதில் இருந்து விலகி காங்கிரசில் சேர முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு வன்னியர் சமுதாயத்தின் ஆதரவு உள்ளது என்றார்.
டாக்டர் ராமதாஸின் சம்பந்தி கிருஷ்ணசாமி. இவர் எம்.பியாக உள்ளார். இவரது மகளைத்தான் அன்புமணி கட்டியுள்ளார். இவர் காங்கிரஸில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக உள்ளார். அதேபோல கிருஷ்ணசாமியின் மகனும், அன்புமணியின் மச்சானுமான விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் கட்சியில் முக்கிய எம்.எல்.ஏக்களில் ஒருவர். இந்த வரிசையில் தற்போது ராமதாஸின் சகோதரரும், சகோதரர் மகனும் காங்கிரஸில் இணையவுள்ளனர்.
நவம்பர் 7ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் சீனிவாச கவுண்டரும், சந்திரசேகரனும் காங்கிரஸில் இணைகின்றனர். விழாவுக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை தாங்குகிறார். தங்கபாலுவும் கலந்து கொள்கிறார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications