நிதீஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி-சோனியா விளாசல்
பெகுசராய்: பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. தனது அரசு செய்யும் தவறுகளுக்கு மத்திய அரசை குறைசொல்கிறார் என்று கூறியுள்ளார் சோனியா காந்தி.
பீகாரில் 6 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் நேற்றோடு 3 கட்ட வாக்குப் பதிவு முடிந்தது.
நேற்று பெகுசராய், பகல்பூர் ஆகிய இடங்களில் நடந்த பிரசாரக் கூட்டங்களில் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், முதல்வர் நிதீஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மதவாத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் தான் மதச்சார்பற்றவன் என்று அவர் கூறுவதை ஏற்க முடியாது.
பீகார் அரசு இயந்திரம் அனைத்து நிலைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. சுகாதாரம், கல்வித் துறைகளில் பீகார் மிகவும் பின் தங்கியுள்ளது. மத்திய அரசிடமிருந்து கோடிக்கணக்கில் நிதியைப் பெற்றும் அவற்றை பீகார் அரசு சரிவரப் பயன்படுத்தவில்லை.
எங்கு பார்த்தாலும் ஊழல் புகார்களாக உள்ளன. இதைத் தடுக்க உருப்படியான நடவடிக்கை எதையும் பீகார் அரசு எடுக்கவில்லை.
தான் செய்யும், தனது அரசு செய்யும் தவறுகளுக்கும், அரசின் தோல்விகளுக்கும், வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தாதற்கும் மத்திய அரசை குறை கூறித் தப்பிக்கப் பார்க்கிறார் நிதீஷ் குமார் என்றார் சோனியா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications