செல்போனில் படம் எடுத்ததாகக் கூறி மாணவரை தாக்கிய பேராசிரியர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் செல்போனில் படம் எடுத்ததாகக் கூறி கல்லூரி மாணவரை பேராசிரியர்கள் அடித்து உதைத்தனர். இதையடுத்து போலீசார் 3 பேராசிரியர்களைத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பொன்னாகரத்தைச் சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரின் மகன் ஜோசப் தினகரன். இவர் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. விலங்கியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இவர் கல்லூரி முதல்வர் அறை அருகே செல்போனை இயக்கியபடி சென்றாராம். அப்போது அங்கு நின்ற 3 பேராசிரியர்கள் ஜோசப் தினகரனை பார்த்து எப்படி எங்களை படம் எடுக்கலாம் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் நான் படம் எதுவும் எடுக்கவில்லை, நம்பரைதான் பார்த்தபடி சென்றேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இதை நம்பாத பேராசிரியர்கள் 3 பேரும் அவரை ரவுண்ட் கட்டி அடித்து உதைத்துள்ளனர்.
இதில் காயமடைந்த ஜோசப் தினகரன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி அந்த கல்லூரியைச் சேர்ந்த கணித பேராசிரியர் முனியப்பன, தாவரவியல் துறைத் தலைவர் ஹரிநாதன், கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர் ஜோசப் ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
மாணவரை ஆசிரியர்கள் தாக்கிய சம்பவம் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications