2011ல் புதுச்சேரியிலும், 2016ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும்-ராமதாஸ்
புதுச்சேரி: தமிழகத்தில் 2011-ல் அங்கு ஆட்சி அமைக்க முடியாது. அதற்கடுத்த தேர்தலில் பா.ம.க. ஆட்சி தமிழகத்தில் அமையும். ஆனால் 2011-ல் புதுச்சேரியில் பா.ம.க. ஆட்சி அமையும் என்று பேசியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
புதுச்சேரி மாநில பா.ம.க. கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:
பா.ம.க. ஒரு வித்தியாசமான கட்சி ஆகும். நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதை சொல்வதற்கு நேரம் இல்லை. புதுச்சேரி மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. புதுச்சேரியில் வருகிற 2011-ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் நாம் வெற்றி பெற்று ஆள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
10 தொகுதியில் நாம் வெற்றி பெற்றால் நமது தலைமையில் தான் ஆட்சி அமையும். கொள்கை மாறாமல், அணி மாறாமல் ஆளுங்கட்சிக்கு துதிபாடாமல் புதுச்சேரியில் செயல்படும் ஒரே கட்சி பா.ம.க. தான். நமது பொறுப்பாளர்கள் அறிவு கூர்ந்தவர்கள். துணிவு மிக்கவர்கள். உழைப்பில் தான் கொஞ்சம் குறை உள்ளது. அதனை சரி செய்தால் ஆட்சி நம்மிடம் தான்.
கட்சியை இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறோம். 2011-ல் அங்கு ஆட்சி அமைக்க முடியாது. அதற்கடுத்த தேர்தலில் பா.ம.க. ஆட்சி தமிழகத்தில் அமையும். ஆனால் 2011-ல் புதுச்சேரியில் பா.ம.க. ஆட்சி அமையும்.
வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்களை பா.ம.க.வில் சேர்த்தால் ஆட்சி மாற்றம் நிச்சயம். 15 தொகுதிகளை எடுத்து கொண்டு வேலை செய்தால், தனித்து நின்றாலும் கூட 10 தொகுதியிலும் வெற்றி நிச்சயம்.
கூட்டணிக்கு தலித் இளைஞர்களை சேர்த்து கொள்ளலாம். இதற்காக ஒரு ஒப்பந்தம் போட்டு கொள்ளலாம். தலித் இளைஞர்களுக்கும், வன்னிய இளைஞர்களுக்கும் நாங்களும் ஆள வேண்டும் என்ற எண்ணம் வந்தால் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். கட்சி என்றால் நல்லது, கெட்டது இருக்கும். எது என்றாலும் உறுதியாக கடைசி வரை இருக்க வேண்டும். சுய நலத்திற்காகவும், பதவிக்காகவும் தனி அணி செல்வதில் சரியல்ல.
சாதி வாரியாக மக்கள் கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் எந்த பயனும் இல்லை. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்து உள்ளோம். புதுச்சேரி முதல்வர், சாதிவாரி கணக்கெடுப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதாக கூறியுள்ளார். இது நல்ல முயற்சி. புதுச்சேரி அரசின் ஆணையை தமிழக முதல்வரிடம் நேரில் கொடுத்து இருக்கிறோம்.
புதுச்சேரியில் உள்ள 70 சதவீத வன்னிய மக்கள் பா.ம.க.வுக்கு தான் வாக்களிப்போம் என்று உறுதி அளித்தால் பா.ம.க. நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
மக்களை பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி பா.ம.க. தான். எனவே புதுச்சேரி மக்கள் எங்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு தாருங்கள். புதுச்சேரியை மாற்றி காட்டுகிறோம்.
வன்னியர்களுக்கு சமூகம், பொருளாதார மாற்றம் எதிர்காலத்தில் கிடைக்க பா.ம.க.வுக்கு வாருங்கள். புதுச்சேரியில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளை மூடுவோம் என்றார் ராமதாஸ்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications