புதுச்சேரி: 3 எம்.எல்.ஏக்களில் 2 பேர் புறக்கணிப்பு-ராமதாஸுக்கு அதிர்ச்சி!
புதுச்சேரி: 2011ல் ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்று வீர முழக்கமிட்ட டாக்டர் ராமதாஸுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதுச்சேரியில் உள்ள 3 பாமக எம்.எல்.ஏக்களில் 2 பேர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சியை புறக்கணித்தது பாமக வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சென்றிருந்த டாக்டர் ராமதாஸ், அங்கு நடந்த கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் முதலியார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்சி தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் பாமக எம்.எல்.ஏக்களான அருள்முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இன்னொரு எம்.எல்.ஏவும் சட்டமன்ற பாமக தலைவருமான ஆனந்தராமன் மட்டுமே கலந்து கொண்டார்.
2 எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பை மேற்கொண்டதற்கு கோஷ்டிப் பூசலே காரணமாம். முன்பு பாமக மாநில செயலாளராக இருந்தவர் பேராசிரியர் ராமதாஸ். இவர் எம்.பியாகவும் இருந்தார். கடந்த லோக்சபா தேர்தலோடு அரசியலுக்கு முழுக்குப் போட்டு விட்டு மீண்டும் பேராசிரியர் பணிக்குப் போய் விட்டார்.
அவர் மாநிலச் செயலாளராக இருந்தபோது, எம்.எல்.ஏக்கள் பன்னீர் செல்வம், அருள்முருகன், ஆனந்தராமன் ஆகியோரை அரவணைத்து ஒருங்கிணைத்து செயல்பட்டு வந்தார். ராமதாஸ் விலகலுக்குப் பின்னர் ஆனந்தராமனை மாநிலச் செயலாளராக்கியது கட்சி மேலிடம். அவர் வந்தது முதல் மற்ற இரு எம்.எல்.ஏக்களையும் புறக்கணிக்க ஆரம்பித்தார்.
எந்த நிகழ்ச்சிக்கும் அவர்களை சரிவர கூப்பிடுவது இல்லை. நோட்டீஸ்கள், போஸ்டர்களில் பெயர்கள் இடம் பெறாமல் தீவிரமாக பார்த்துக் கொண்டார். இதனால் கடுப்பான அருள் முருகனும், பன்னீர் செல்வமும் எந்தக் கூட்டத்திற்கும் போவதில்லை.
இந்த நிலையில் கட்சி நிறுவனரான டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சியையே அவர்கள் புறக்கணித்து விட்டதால் கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிப்போம் என்று டாக்டர் ராமதாஸ் கூறி ஒரு நாள் கூட ஆகாத நிலையில், கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் ராமதாஸையே புறக்கணித்திருப்பது புதுவை பாமக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications