நெல்லை, தூத்துக்குடியில் கன மழை: 10 வீடுகள் சேதம்
தூத்துக்குடி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டக்களில் கன மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதாலும் மழையளவு அதிகரித்துள்ளது.
பல இடங்களில் மழை நீடிப்பதால் கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்து ஏரி, பாசன குளங்கள் நிரம்பத் துவங்கியுள்ளன. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் உயரத் துவங்கியுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் மழைக்கு 10 வீடுகள் சேதமடைந்துள்ளன என வருவாய் துறையினர் கணக்கெடுத்துள்ளனர்.
மழை காரணமாக உப்பளங்களில் நீர் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு உப்பு ஏற்றுமதி செய்யும் பணியும் தேக்கமடைந்துள்ளது. மீனவர்கள் பெரும்பாலானோர் மீன்பிடிக்க செல்லவில்லை. மழை காரணமாக முக்கிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.
மாவட்டத்தின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது என்று மானாவாரி விவசாயிகள் மகிழும் நிலையில் தெற்கு மற்றும் தென்கிழக்கு, தென்மேற்கு பகுதிகளில் போதிய மழை இல்லை.
இதனால் நெல், வெற்றிலை, வசம்பு பயிரிடும் விவசாயிகள் மழையை எதிர்நோக்கியுள்ளனர். நெல்லையில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயிலடித்த நிலையில் மாலையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications