சாமி வழக்கு போடுவதை தடுக்கும் முயற்சியி்ல் பிரதமர் ஈடுபடவில்லை-சுப்ரீம் கோர்ட்

சாமி அனுப்பிய கடிதங்களுக்கு பதில் அனுப்பாமல் காலதாமதம் செய்தது தொடர்பாக பிரதமர் அலுவலகம் அளித்துள்ள விளக்க மனு மீதான விசாரணையை இன்று உச்சநீதிமன்றம் மேற்கொண்டது.
அப்போது பிரதமர் சார்பில் அட்டர்னி ஜெனரல் வாகனாவதி ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், தான் வழக்கு தொடர பிரதமரின் அனுமதி கோரி சுப்பிரமணியம் சாமி அனுப்பிய கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பிரதமர் கால தாமதம் செய்தார் என்று கூறி சாமி தொடர்ந்து வழக்கு சட்டப்படி தவறானதாகும் என்று வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சாமி வழக்குப் போடுவதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரதமர் நடந்து கொண்டதாக தெரியவில்லை என்று தெரிவித்தனர்.
முதலில் பிரதமர் மீதும், பிரதமர் அலுவலகம் மீதும் குற்றம் சாட்டியிருந்த சாமி, பிரதமர் அலுவலகத்தின் பதில் மனு தாக்கலுக்குப் பின்னர், பிரதமர் மீது எந்தத் தவறும் இல்லை. ஆனால் சட்ட அமைச்சக அதிகாரிகள்தான் பிரதமருக்கு தவறான தகவலைத் தந்து திசை திருப்பி விட்டதாக கூறியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications