அம்பத்தூர்-திருவான்மியூர் இடையே 3-வது மெட்ரோ பாதை-அரசு பரிசீலனை

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் அதிக அளிவில் உள்ளது. இதை குறைக்க முதல் மற்றும் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இதில் முதல் கட்டத்தில் 2 பாதைகள் அதுவும் 2 வகையாக அமைக்கப்படுகின்றன.
முதல்பாதை சென்னை சென்டிரலில் இருந்து பெரியார் சாலை, வேப்பேரி, கீழ்பாக்கம் மருத்துவமனை, அமைந்தகரை, ஷெனாய்நகர், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் 2-வது அவென்யூ, திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர், சிட்கோ, ஆலந்தூர் வழியாக பரங்கி மலை வரை அமைக்கப்படுகிறது. 22 கி மீ தூரம் கொண்ட இந்த பாதை சில இடங்களில் உயரமாகவும், சில இடங்களில் பூமிக்கு அடியிலும் அமைக்கப்படும்.
தற்போது கோயம்பேட்டில் இருந்து அசோக்பில்லர் வரை ரயில் பாலம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
23.1 கி மீ தூரம் கொண்ட இரண்டாவது பாதை வண்ணாரப்பேட்டையில் இருந்து பிராட்வே, (பிரகாசம் சாலை), சென்னை சென்டிரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, கூவம் ஆறு, அரசினர் தோட்டம், தாராப்பூர் டவர், ஸ்பென்சர், ஜெமினி, அண்ணாசாலை, சைதாப்பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம் வரை அமைக்கப்படும்.
இதற்கிடையே அம்பத்தூர்- திருவான்மியூர் இடையே 3-வது கட்ட மெட்ரோ ரெயில் பாதை அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இது இன்னர் ரிங்ரோடு, ஆற்காடு சாலை, பனகல்பார்க், எல்டாம்ஸ் ரோடு, லஸ் சர்ச் ரோடு, ஆர்.கே.பட் ரோடு, அடையாறு பாலம், லட்டீஸ் பிரிட்ஜ் ரோடு வழியாக அமைக்க ஆலோசனை நடந்து வருவதாக மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்தன.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications