மழை வெள்ள சேதம்-நிவாரணப் பணிகளுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு

மழை, வெள்ள சேதம், நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் ரூ. 100 கோடி நிவாரண நிதியை ஒதுக்கீடு செய்து அவர் உத்தரவிட்டார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
முதலமைச்சர் கருணாநிதி தற்போது பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து, புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று (30.11.2010) ஆய்வு செய்தார்.
பெருமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர்கள் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதமும்; உயிரிழந்த கால்நடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வரையிலும்; தேவையான இடங்களில் உணவு வழங்கியும் தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை மதிப்பீடு செய்து, சேதம் குறித்த அறிக்கை அனுப்பும் பணியில் மாவட்ட ஆட்சியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பாலங்கள், சாலைகள், ஏரிகள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாகச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், குடிசைகளை இழந்தோருக்கு - முழுமையான அளவில் குடிசைகள் சேதம் அடைந்திருந்தால், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 2 ஆயிரம் ரூபாய் என்பதை 5 ஆயிரம் ரூபாயாகவும்; பகுதியாக குடிசைகள் சேதமடைந்திருந்தால், ஏற்கனவே வழங்கபட்டு வந்த ஆயிரம் ரூபாய் என்பதை 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.
இந்தப் பெருமழையினால் ஏற்பட்டுள்ள பேரிடர் தொடர்பான நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications