நீரா ராடியா தொடர்பான ஆடியோ பதிவுகளை மத்திய அரசு ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நீரா ராடியா தன்னுடன் பேசியதன் பதிவுகளை மீடியாக்கள் மூலம் அம்பலப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலதிபர் ரத்தன் டாடா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராடியா தொடர்பான அனைத்து ஆடியோ பதிவுகளையும் சுப்ரீம் கோர்ட் பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு இன்று உத்தரவிட்டது.
இதையடுத்து ஆடியோ பேச்சுக்கள் அடங்கிய கம்ப்யூட்டர் ஹார்ட் டிரைவ்கள், சிடிக்கள், டேப்புகள் உள்ளிட்டவற்றை மூடிட்ட கவரில் வைத்து ஒப்படைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2008-09ம் ஆண்டு கால கட்டத்தில் வருமான வரித்துறையினர் தங்களது விசாரணை தொடர்பாக ராடியாவின் தொலைபேசி பேச்சுக்களை ஒட்டுக் கேட்டு பதிவு செய்து வந்தனர். கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் இதுபோல ஒட்டுக்கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் சில சமீபத்தில் மீடியாக்களில் லீக் ஆகியது.
பத்திரிக்கையாளர்கள் பர்கா தத், வீர் சிங்வி, தொழிலதிபர் ரத்தன் டாடா, முன்னாள் அமைச்சர் ராஜா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருடன் ராடியா பேசிய பேச்சுக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தேசிய அளவில் நடந்த பல்வேறு பேரங்கள் உள்ளிட்டவை அம்பலமாகியுள்ளன.
இந்த நிலையில் இதை எதிர்த்து டாடா வழக்குப் பதிவு செய்தார்.அந்த வழக்கில்தான் தற்போது அனைத்து டேப்புகளையும் ஒப்படைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
