பிச்சைக்காரர்களையும், மனநோயாளிகளையும் குறிவைக்கும் மாவோயிஸ்ட்கள்

Subscribe to Oneindia Tamil

Naxals
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜங்கல்மஹாலில் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்களையும், மனநோயாளிகளையும் குறி வைத்து மாவோயிஸ்ட்கள் கொன்று வருகின்றனர்.

மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள சல்போனி பகுதி, லால்கார் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடந்த நான்கு மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களும், மனநோயாளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் பெரும் அதிர்ச்சியில் உள்ளது.

மாவோயிஸ்ட்கள் தாங்கள் காட்டுப் பகுதிக்குள் மறைந்திருக்கும் இடங்களை இவர்கள் தான் போலீசாருக்குத் தெரிவிக்கின்றனர் என்று சந்தேகிக்கின்றனர். இதனால் தான் பிச்சைக்காரர்களையும், மனநோயோளிகளையும் குறிவைத்து கொலை செய்கின்றனர்.

இது குறித்து ஜார்கிராம் எஸ்.பி. பிரவீன் த்ரிபாதி கூறியதாவது,

கடந்த 4 மாதத்தில் சல்போனியில் 12 பேரும், பேல்பஹரியில் 12 பேரும், லால்காரில் 5 பேரும், நயகிராமில் நிறைய பிச்சைக்காரர்களையும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும் திடீர் என்று காணவில்லை. அவர்களில் சில பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+