கோவை கொலை வழக்கில் ஜான்பாண்டியன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை
திருநெல்வேலி: கோவை நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜான் பாண்டியன் உள்ளிட்ட 5 பேரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரம் பகுதியில் நிதி நிறுவன அதிபரான விவேக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் ஊத்துக்குளி ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்.
இந்தக் கொலை தொடர்பாக ஜான் பாண்டியன், தொழிலதிபர் வெங்கட்ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜான்பாண்டியன் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 2003ம் ஆண்டு முதல் ஜான் பாண்டியன் சிறையில் இருந்து வருகிறார்.
இந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஸ்ரீபுர்கார், ஸ்ரீயாத் ஜோசப் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜான் பாண்டியன் உள்ளிட்ட 5 பேரை விடுவித்து தீர்ப்பளித்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications