மும்பை தாக்குதல்-சாட்சிகளை விசாரிக்க பாக்.குக்கு அனுமதி
டெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவ வழக்கின் சாட்சிகளை விசாரிக்க பாகிஸ்தானுக்கு இந்தியா அனுமதி தரவுள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளைகள், அதை ரிமோட் கன்ட்ரோல் மூலம் நிறைவேற்றிய பயங்கரவாத தலைவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி நமது நாடு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதை பாகிஸ்தான் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் மும்பையில் நடந்து வரும் வழக்கில், சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்களை பாகிஸ்தான் விசாரிக்க இந்தியா அனுமதி தரப் போகிறதாம்.
விரைவில் இதற்காக பாகிஸ்தானிலிருந்து ஒரு குழு இந்தியா வரவுள்ளதாம். இவர்கள் வழக்கின் முக்கிய சாட்சிகளை சந்தித்து பேசுவார்களாம். மேலும் முக்கிய அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்துப் பேசுவார்களாம்.
மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள சிலர் தொடர்பாக இவர்களிடம் பாகிஸ்தான் குழு விசாரிக்கவுள்ளதாம்.
அடுத்த வாரம் இந்த சந்திப்புக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் குழு சந்திக்கவுள்ளவர்களில் முக்கியமானவர்களாக கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் ஆர்.வி. சவந்த் வகுலே மற்றும் விசாரணை அதிகாரி ரமேஷ் மஹளே ஆகியோர் ஆவர். இவர்கள்தான் அஜ்மல் கசாப்பின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தவர்கள் ஆவர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டு கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்களையும் பாகிஸ்தான் குழு சந்திக்குமாம்.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications