ஊழலை மறைக்கவே திமுக-காங். கூட்டணிக்கு நேரம் போதவில்லை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
தர்மபுரி: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு தடுமாறுவதாக மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
தர்மபுரியில், தகவல் தொழில் நுட்ப அறிவு மையம் மற்றும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி துவக்க விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இதுவரை நடைபெறாத மெகா ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகும். இந்தப் பிரச்சனையில் ஆளும் கூட்டணி அரசு நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த மறுப்பதால் தான் நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் கூட விவாதிக்கப்படவில்லை. நிதி மற்றும் ரயில்வே மசோதாவை ஒரு தலைப்பட்சமாக அரசு நிறைவேற்றியுள்ளது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை தடுத்து இருந்தால் உணவுப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியும்.
இந்த தொகையில் நாட்டில் உள்ள பெரும் பகுதி மக்களுக்கு புதிய மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் கட்டியிருக்க முடியும். உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்திருக்க முடியும்.
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால் சில குடும்பங்கள், கட்சிகள் பலனடைந்துள்ளன என்று நாடாளுமன்றத்திலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு, கர்நாடக பாஜக அரசின் ஊழல்கள் ஆகியவற்றை மக்களிடம் அம்பலப்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் துவக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆக்கப்பூர்வமான எந்தப்பணியையும் மேற்கொள்ளவில்லை. ஊழல் புகார்களை மூடி மறைக்கவே இவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications