மாஜி யு.எஸ். துணை அதிபர் டிக் செனி மீது நைஜீரியா லஞ்சப் புகார்
அபுஜா: முன்னாள் அமெரிக்க துணை அதிபர் டிக் செனி, ஹாலிபர்டன் நிறுவனத் தலைவராக இருந்தபோது லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக நைஜீரிய நாட்டு ஊழல் ஒழிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
240 மில்லியன் டாலர் லஞ்ச புகாரை விசாரிக்க செனி மீது பொருளாதாரம் மற்றும் நிதிக் குற்றக் கமிஷன் வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து அந்த விசாரணைக்காக நைஜீரியாவுக்கு அழைக்கப்படவுள்ளார் செனி.
இது குறித்து பொருளாதாரம் மற்றும் நிதிக் குற்றக் கமிஷன் செய்தித் தொடர்பாளர் பாபாபெமி கூறுகையில்,
போன்னித் தீவில் எல்பிஜி தொழிற்சாலை அமைக்க ஒரு நைஜீரிய அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக செனி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவைச் சேர்நத ஹாலிபர்டன் நிறுவனத்தின் நைஜிரிய கிளை நிறுவனத்திற்கு தொடர்புள்ளது.
நைஜீரியாவில் இந்த லஞ்சக் குற்றம் நடந்தபோது செனி அந்நிறுவனத்தின் தலைவராக இருந்துள்ளார். ஆனால் இந்த குற்றம் நடந்ததற்கு முன்பே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தது கண்டிபிடிக்கப்பட்டதையடுத்து இது தொடர்பாக அமெரிக்காவில் நடந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.
இந்த வார தொடக்கத்தில் இந்த வழக்கு தொடர்பாக அந்த எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு முன் அமெரிக்கா அவர்களிடம் விசசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹாலிபர்டன் நிறுவன ஊழியர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். எந்த நேரத்திலும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கலாம் என்பதால் அவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பாஸ்போர்ட் உள்ளிடட் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் வெளிநாட்டவர் தவிர்த்து 10 நைஜீரியர்களும் கைது செய்யப்பட்டனர்.
கேபிஆர் மற்றும் ஹாலிபர்டன் ஆகிய இரு நிறுவனங்களும், போன்னி தீவில் உள்ள எல்பிஜி திட்டத்திற்கான ஒப்பந்தத்தை கைப்பற்ற நைஜீரிய அதிகாரிகளுக்கு 180 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க கோர்ட்டில் ஒத்துக் கொண்டன. மேலும் இந்த விவகாரத்தை முடிக்க 579 மில்லியன் டாலர் கொடுக்கவும் சம்மதித்தன. இந்த ஒப்பந்தத்தின் காலம் கடந்த 1994-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை ஆகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications