For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழிக்கின்றன-ராமதாஸ் வேதனை

Google Oneindia Tamil News

மதுராந்தகம்: தமிழக இளைஞர்களை சினிமாவும், மதுவும் சீரழித்து வருகின்றன. இவற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

மதுராந்தகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட பாமக கிளை நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

ஒவ்வொரு கிராமத்திலும் கல்வி, மருத்துவம், விவசாயம், விளையாட்டுக் குழுக்களை தொடங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். கிராமத்தில் பசி, பட்டினி இருக்கக் கூடாது. அனைவரும் படிக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒருவராவது அரசு வேலையில் இருக்க வேண்டும். இப்படி இருக்க வேண்டும் என கொள்கை வைத்துள்ள கட்சி பாமக.

எங்கள் கிராமத்தில் யாரும் குடி பழக்கத்துக்கு அடியாகவில்லை. புகைப்பதில்லை. திருமணத்துக்கு வரதட்சணை வாங்குவதில்லை என விளம்பர பலகைகள் வைத்தால் அக்கிராமம் முன்னேறும். தமிழகத்தில் மது பழக்கத்தாலும், திரைப்பட மோகத்தாலும் பல இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர் என்றார் ராமதாஸ்.

English summary
Dr.Ramadoss slammed Cinema and Liqour for eroding the lives of TN youth. He attended a PMK function in Mathuranthagam he said, TN youths should shun Cinema and Liqour. Both are destroying your lives. TN youths should not demand dowry, abandon smoking, then only Tamil Nadu can progress, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X