ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி
மதுரை: அதிமுக பொதுச் செயலாளர் விடும் அறிக்கைகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என மத்திய அமைச்சர் முக அழகிரி கூறினார்.
மதுரை செல்லூரில் ரூ.29 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சாலை மேம்பாலத்தினை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அதிமுக வெற்றி பெற்று அடுத்து ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளாரே?" என்று கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.
அதற்கு பதிலளித்த அழகிரி, "ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கலைஞர் ஆட்சியில் சொன்னதையும் செய்துள்ளோம். சொல்லாததையும் நிறைவேற்றுவோம்...", என்றார்.
மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக ஆக்கப்படுமா? என்ற கேள்விக்கு, "நேற்று கூட மத்திய அமைச்சர் வயலார் ரவியிடம் பேசினேன். மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்கோ வசதி அளிக்கப்படாமல் இருந்ததையும் அவருடன் பேசினேன். விரைவில் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்..." என்றார்.












Click it and Unblock the Notifications