மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்போம்-பிரணாப் சொதப்பல் பேச்சு
சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொதப்பலாக கூறியுள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
சென்னை வந்திருந்த பிரணாப் முகர்ஜி முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கை கடற்படை ரவுடிக் கும்பலால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து முதல்வர் பிரணாபிடம் விவாதித்தார்.
சந்திப்புக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த கவலையை தெரிவித்தார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாம் இலங்கை அரசோடு நல்ல நட்புறவு கொண்டுள்ளோம். நாம் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் வேளையில் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுவதை நாம் நியாயப்படுத்த முடியாது.
மீனவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, இம்மாதிரியான சுட்டுக் கொல்லும் சம்பவங்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது. இந்திய வெளியுறவுத்துறை மூலம் இலங்கை அரசுடன் பேசி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாவண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளேன் என்றார் பிரணாப் முகர்ஜி.
இலங்கை கடற்படை சுட்டு கொன்றுள்ள மீனவர் ஜெயக்குமாரின் மரணத்திற்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை பிரணாப் முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications