சென்னையில் புத்த மட தாக்குதலில் 4 பேர் காயம் : இலங்கை அரசு கண்டனம்
சென்னை : சென்னையில் உள்ள புத்த மடத்துக்குள் ஒரு மர்ம கும்பல் திடீர் எனப் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலை ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகிக்கப்படுகிறது.
இது குறி்த்து போலீசார் கூறுகையில், "நேற்று எழும்பூரில் உள்ள புத்த மடத்துக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அவர்கள் அங்குள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர்," என்றனர்.
கடந்த 22-ம் தேதி தமிழக மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் இந்த தாக்குதல் நடந்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இலங்கை அரசு இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் உள்ள புத்தமட தாக்குதலுக்கு பின் வேறு சில காரணங்கள் உள்ளன. இது இலங்கையில் மத மோதல்கள் ஏற்படுத்தும் நோக்கோடு நடத்தப்பட்டுள்ளது. இதை நம்பி யாரும் அவர்கள் வீசிய வலையில் சிக்கிவிட வேண்டாம்," என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications