தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற கோரிக்கை - நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் குழு அமைப்பு
மதுரை: தேவேந்திரகுல வேளாளர் பிரிவின் அனைத்து உட்பிரிவுகளையும் இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்றே பெயர் மாற்றம் செய்யக் கோரி எழுந்த விவகாரம் குறித்து விசாரிக்க நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,
குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய ஏழு பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும்.
அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து ஆணையிட வேண்டும் என்று தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் ம. தங்கராஜ் கடையநல்லூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் மூலமாக வைத்த கோரிக்கை தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கோரிக்கை குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் நிதியமைச்சர் அன்பழகன், உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் ஆ. தமிழரசி, பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரை மாற்றுவது குறித்து சட்ட ரீதியாகப் பரிசீலனை செய்ய நீதியரசர் ஜனார்த்தனம் தலைமயில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இந்த விவகாரம் குறித்து பரிந்துரை செய்யும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications