மக்கள் சாவதை விரும்பவில்லை, ஜல்லிக்கட்டை தடை செய்யலாமா?-சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: வீர விளையாட்டாயினும் மக்கள் சாவதைத் தடுக்க ஜல்லிக்கட்டை தடை செய்யலாமா? என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது. மக்கள் சாவதை நாங்கள் விரும்பவில்லை, நீங்கள் விரும்புகிறீர்களா என்றும் அது கேட்டுள்ளது.
விலங்குகள் நல வாரியம் ஜல்லிக்கடை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. அந்த மனு நேற்று நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது விலங்குகள் நல வாரியம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜ் பஞ்ச்வானி ஆஜரானார். அவர் தமிழகத்தில் கடந்த ஜனவரி 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 2 பேர் பலியாகினர், 215 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று கூறினார்.
அவர் வாதத்தை கேட்ட நீதிபதிகள் தமிழக அரசு வழக்கறிஞரிடம் கூறியதாவது,
ஜல்லிக்கட்டுக்கு ஐந்தே நாட்களில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 200 முதல் 300 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். நீதிமன்ற கண்காணிப்பையும், விதிமுறைகளையும் மீறி இந்த விபரீதம் நடந்திருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது. மக்கள் சாவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, ஜல்லிக்கட்டை தடை செய்யலாமா?
ஜல்லிக்கட்டை தடை செய்து தான் ஆக வேண்டும் என்று கூறவில்லை. இது மரியாதைக்குரிய, பாரம்பரிய விளையாட்டாக இருக்கலாம். ஆனால் அதற்கென சில பாதுகாப்பு நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டை ஒழுங்குபடுத்த தமிழக அரசு சில கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
ஜல்லிக்கட்டை நடத்தும் ஒரு அமைப்பின் வக்கீல், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம், மாவட்ட கலெக்டர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
உடனே நீதிபதிகள், இன்னும் ஆயிரம் பேர் சாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்று அவரைப் பார்த்து கேட்டனர். பின்னர் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications