தாமஸ் நியமனம்-மீண்டும் சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தை சம்பாதித்த மத்திய அரசு
டெல்லி: தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் பி.ஜே. தாமஸை நியமித்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு மீண்டும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக, கேரளாவில் பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில் சிக்கி குற்றவாளிகள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள தாமஸை நியமித்ததை ரத்து செய்யக் கோரி பொது நலன் மனுக்களுக்கான மையம் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அடுத்தடுத்து மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி ஆஜராகி, பதவி நியமனத்தின்போது குற்றப்பத்திரிக்கை என்பது ஒரு தடையே அல்ல என்று தெரிவித்தார்.
இதைக் கேட்டு கோபமடைந்த தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச், தாமஸை நியமிப்பதற்கு முன்பு, அவருடைய சர்வீஸ் கோப்புகளை பரிசீலனை செய்தீர்களா என்று கேட்டனர். மேலும், தாமஸை, தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கலாம் என்று பரிந்துரை செய்த, முன்னாள் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் அனுப்பிய கோப்பை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டனர்.
அதற்குப் பதிலளித்த வாஹன்வதி, தலைமை கண்காணிப்பு ஆணையரை நியமிக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்ட பின்னர், அவர் மீதான வழக்குகள் குறித்து விசாரிக்க வேண்டியதில்லை என்று கூறினார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி கபாடியா, அப்படியானால், இது எல்லா நியமனங்களுக்கும் பொருந்துமா என்று கேட்டார். அதற்கு வாஹன்வதி, இது ஒரு குழப்பமான விஷயம் என்றார்.
அந்த சமயத்தில் குறுக்கிட்ட மனுதாரரின் வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன், தாமஸை நியமிப்பதற்கு முன்பு அவர் குறித்த கோப்புகளில், அவர் மீதான பாமாயில் ஊழல் குறித்த விவரங்கள் சேர்க்கப்படவில்லை. மேலும், தாமஸ் மீதான குற்றப்பத்திரிக்கையும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. கிட்டத்தட்ட இந்தத் தகவல்களை மறைத்துள்ளனர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications