சத்தியமூர்த்தி பவன் மண் கூட வேண்டாம்.. உடைகளை உதறிவிட்டு போங்கள்-ஆதரவாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்

எனக்கு கிடைக்காதது வருத்தமில்லை..ஆனால்:
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த அமைக்கப்பட்ட குழுவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இடம் தரப்படாததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் இன்று காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
அப்போது சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த இளங்கோவன் தனது ஆதரவாளர்கள மத்தியில் பேசுகையில்,
தேழாமைக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் என்னை சேர்க்கவில்லை என்பதால் வருத்தமில்லை. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு அனைத்து விஷயங்களும் தெரியும். சட்டமன்ற உறுப்பினர் யசோதாவும் கட்சிக்காக பாடுபட்டவர். யசோதா எனக்கு ஆதரவு தருபவர் அல்ல. என்னை எத்தனையோ கூட்டங்களில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமைச்சராக இருக்கும்போது சிங்கமாக இருந்தார். இப்போது அசிங்கமாக இருக்கிறார் என்று யசோதா விமர்சித்துள்ளார். இருப்பினும் அவர்களையும் இந்தக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.
ஐவர் குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்பட அனைவரும் பிரபலமானவர்கள்தான். அவர்கள் ஐவர் குழுவில் இடம் பெற்றிருந்தது சந்தோஷம்தான். ஆனால் தமிழகத்தில் எந்த தொகுதியில் காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ளது. எந்த தொகுதியை பெறலாம் என்பதை தெரிந்தவர்களும் இடம்பெற வேண்டும்.
குலாம் நபி ஆசாத்திடம் நான் பேசும்பபோது, தொகுதி பங்கீட்டுக்கான குழு பற்றி முடிவு செய்யவில்லை என்றார். ஆனால் ஐவர் குழு அறிவித்தவுடன் என்னிடம் பேசிய அவர், உங்கள் பெயர் இடம் பெறவில்லை. இது மேலிட உத்தரவு என்கிறார்.
தங்கபாலு என்ற ஜந்து:
சோனியா காந்தி போன் செய்யும்போது தங்கபாலு பேசுவதே கிடையாது. தங்கபாலு போன்ற ஜந்து கட்சியில் இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு கேடு. சத்தியமூர்த்தி பவனில் இதுவரை இரவு நேரங்களில்தான் கூட்டம் சேர்ந்ததை பார்த்திருக்கிறார்கள். ஏன் என்றால் சத்தியமூர்த்தி பவனில் இரவு நேரங்களில் தங்கபாலு பூஜை போடுகிறார். ஆனால் இன்றுதான் பகலில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடுகிறது. இதைப் பார்த்தால் நான் கட்சியில் இருந்து வெளியேறி விடுவேனோ என்று பயந்து விடுவார்கள்.
திமுகவில் தொகுதி பங்கீட்டுக் குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் அனைவரும் ஜாம்பாவான்கள், திறமைசாலிகள். அமைச்சர் துரைமுருகனுக்கு தமிழகத்தில் எத்தனை ஆறுகள், குளங்கள், குட்டைகள் இருக்கின்றன என்பதெல்லாம் தெரியும். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் மக்களின் மனநிலை என்பது என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியும். திமுக குழுவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு சமமாக காங்கிரஸ் குழுவில் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
உண்ணாவிரதத்தின்போது இங்கே நமது தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முற்பட்டார். ஏன் தீக்குளிக்க வேண்டும். பிரச்சனை வந்தால் எதிர்த்து போராட வேண்டும். தீக்குளிப்பது கோழைத்தனம். முத்துக்குமார் தீக்குளித்து தியாகம் செய்தார் என்று சீமான், நெடுமாறன் போன்றவர்கள் பேசுகிறார்கள். ஏன் இப்படி பேசி பேசி மற்றவர்களை தீக்குளிக்க வைக்கிறீர்கள். அதை நீங்கள் செய்ய வேண்டியதுதானே. ஏன் செய்யவில்லை?. அதை சீமானும், நெடுமாறனும் செய்தால் தமிழ்நாடு நன்றாக இருக்கும்.
இங்கே கூடியிருக்கும் தொண்டர்கள் அனைவரும் எனக்காக அமைதியாக கலைந்து செல்ல வேண்டும். எந்த அசம்பாவிதத்திலும் ஈடுபடக்கூடாது. அனைவரும் தங்கள் உடைகளை உதறிவிட்டு போக வேண்டும். ஏனென்றால் சத்தியமூர்த்தி பவனில் இருந்து மண்ணைக்கூட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அவரது ஆதரவாளர்களும் எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று சொல்வார்கள் அதற்காகத் தான் என்றார்.
முதலில் திமுகவைத் தாக்கியவர் இப்போது காங்கிரஸ் தலைமையையே எதிர்த்து தனது ஆதரவாளர்களை போராட்டம் நடத்த வைத்துள்ளதன் மூலம் இளங்கோவனை அதிமுக தரப்பு தூண்டி விடுகிறதோ என்ற சந்தேகம் காங்கிரஸ் தலைமைக்கு எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications