காதலர் தினம்-தடை கோரி மதுரையில் சிவசேனா ஆர்ப்பாட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக்கோரி சிவசேனா சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை தலைமை தபால் நிலையம் அருகே தமிழ் மாநில சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடநத்து.

காதலர் தின கொண்டாட்டத்தை தடைசெய்யவேண்டும், தியாகி சங்கரலிங்கனாரின் சிலையை சென்னை புதிய தலைமை செயலகத்தின் முன் நிறுவவேண்டும், மதுரையில் தியாகி வைத்தியநாத அய்யர் சிலை அருகே கட்டப்படும் கழிப்பறையை அங்கிருந்து அகற்றவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாநில தலைவர் திரவியபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மொத்தமே 30 போர் கலந்துகொண்டனர். காதலர் தின கொண்டாட்டங்களை தடை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய பாண்டியன்,காதலர் தினம் கொண்டாட்டம் என்பது கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும். கல்லூரிக்கு செல்லும் தங்கள் பிள்ளைகள் காதலில் சிக்கி சீரழிவதால் பல பெற்றோர்கள் நிம்மதி இழக்கிறார்கள். இதனால் காதல் தின கொண்டாட்டத்தையும், காதலர் தின வாழ்த்து அட்டைகள் விற்பனையையும் உடனே தடை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு என்று பெயர் வைக்க காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனார் சிலையை புதிய தலைமை செயலகத்தின் முன்பு அரசு வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சிவசேனா சார்பில் அங்கு அவரது சிலையை வைப்போம் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Shiv Sena today conducted protest against Valentine's Day in Madurai. Sena appealed to the parents to warn their children from celebrating the day. All the hotels, restaurants, parks, theatres and gift shops will be under surveillance by Sena activists, he said.
Please Wait while comments are loading...