தெலுங்கானாவில் ரயில் மறியல்: போக்குவரத்து ஸ்தம்பித்தது
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு இன்று ஹைதராபாத் உள்ளிட்ட 9 தெலுங்கானா மாவட்டங்களில் ரயில் மறியல் நடக்கிறது. இதனால் அங்கு ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
தெலுங்கானா ஆதரவாளர்கள் ஹைதராபாத் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள், நல்கொண்டா, வாரங்கால், நிஜாமாபாத், கம்மம் மற்றும் பிற மாவட்டங்களில் ரயில்களை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் 25 எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்துள்ளனர். இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இன்று காலை 6 மணிக்கு துவங்கிய இந்த ரயில் மறியலுக்கு தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்துள்ளது. இன்று மாலை 6 மணி வரை மறியல் தொடரும். அவர்கள் நாடாளுமன்றத்தில் தெலுங்கானாவை தனி மாநிலமாக்க மசோதா கொண்டுவருமாறு வலியுறுத்தியுள்ளனர்.
மறியலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜெய் தெலுங்கானா என்று கோஷம் எழுப்பிக் கொண்டும், கொடி, பேனர்கள் வைத்துக் கொண்டும் உள்ளனர். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக மற்றும் தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவினர் ரயில் தண்டவாளங்களில் நின்று கொண்டு மறியல் செய்கின்றனர். சில இடங்களில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த மறியலுக்கு காங்கிரஸைச் சேர்ந்த தெலுங்கானா தலைவர்கள், தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா பிரஜா முன்னணி மற்றும் தெலுங்கானா வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications