தேர்தல்-வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடு-ரூ. 1 லட்சம் எடுத்தால் விசாரணை
சென்னை: வங்கிகளில் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் எடுப்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு தேரத்ல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல ரூ. 2 லட்சம் பணம் எடுத்தால் அது பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டசபைத் தேர்தலையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளது தேர்தல் ஆணையம். பீகாரில் கடைப்பிடிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளை அப்படியே தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் கடைப்பிடிப்போம் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தற்போது அதை செயல்படுத்தத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது.
அந்த வகையில் தற்போது புதிய உத்தரவு ஒன்றை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. அதன்படி, யாரேனும் தங்களது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 1 லட்சம் பணம் எடுத்தால் அதுகுறித்து வங்கிகள் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.
ரூ. 2 லட்சம் பணம் எடுத்தால் அந்தப் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்து ஆய்வுக்கு உட்படுத்தும். அதில் சர்ச்சை எதுவும் இல்லாவிட்டால் பணம் திரும்ப கொடுக்கப்படும்.
3 நாட்களில் ரூ. 5 லட்சம் வரை ஒருவர் பணம் எடுத்தாலும் அதுவும் கண்காணிக்கப்படும், ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications