நெல்லையில் திமுக, காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
நெல்லை: மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக திமுக அறிவித்துள்ளதை காங்கிரஸாரும், திமுகவினரும் நெல்லையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இதனால் இரு கட்சியினரிடையேயும் மனதளவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகள் தொகுதிகள் பங்கீட்டில் தீவிரம் காட்டி வரும் நிலையி்ல் ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரசும், திமுகவுக்கும் தொகுதி பங்கீ்ட்டில் பிரச்சனை நிலவி வந்தது.
இந்த நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நேற்று மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக திமுக உயர்நிலை குழு கூடி முடிவு செய்தது. திமுகவின் இந்த முடிவை அந்த கட்சியினர் வரவேற்றுள்ளனர். நெல்லையில் இரவு மாலை ராஜா எம்எல்ஏ தலைமையில் தொண்டர்கள் இனிப்பு கொடுத்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.
அப்போது சிலர் காங்கிரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதே வேளையில் காங்கிரசாரும் திமுக விலகியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பட்டாசு வெடித்தனர். நெலலை சட்டமன்ற இளைஞர் காங்கரசார் துணை தலைவர் பிடி ஆனந்த் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர்












Click it and Unblock the Notifications