Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

17 வயது அழகியுடன் 13 முறை உறவு கொண்ட இத்தாலி பிரதமர்

Subscribe to Oneindia Tamil

Berlusconi Karima el Mahrou
17 வயதான கரீமா எல் மஹரோக் என்கிற ரூபி என்ற மாடல் அழகியுடன் 13 முறை உறவு வைத்துக் கொண்டார் இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனி என்று தகவல் வெளியாகியுள்ளது.

74 வயதாகும் பெர்லுஸ்கோனி, காதல் மாமன்னனாவார். இவரையும், இவரது செக்ஸ் சேட்டைகளையும் பற்றிப் பேசுவதென்றால், பல திண்ணைகள் மாறி மாறி உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம். அந்த அளவுக்கு பெர்லுஸ்கோனியைப் பற்றிக் கிளற கிளற, கிளுகிளுப்பூட்டும், திகிலூட்டும் செக்ஸ் கதைகள் ஏராளமாக உள்ளன.

இந்த நிலையில் தற்போது 17 வயது சிறுமியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக பெர்லுஸ்கோனி சிக்கலில் மாட்டியுள்ளார். இத்தாலி நாட்டுச் சட்டப்படி 18 வயதுக்குட்பட்ட யாருடனும் உறவு வைத்துக் கொண்டால் அது சட்டப்படி குற்றமாகும். எனவேதான் பெர்லுஸ்கோனி மாட்டிக் கொண்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் பெயர் கரிமா எல் மெஹ்ரூக் என்றற ரூபி. இவர் மொராக்கோவைச் சேர்ந்த பெல்லி டான்சர். இவருடன் கடந்த ஆண்டு 13 முறை உறவு வைத்துக் கொண்டாராம் பெர்லுஸ்கோனி.

ரூபி உள்பட 33 பெண்களுக்கு பெர்லுஸ்கோனியுடன் செக்ஸ் தொடர்பு இருந்ததையும் பெர்லுஸ்கோனிக்கு பெண்களை ஏற்பாடு செய்து கொடுத்த அவரது நெருங்கிய கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.

ரூபியுடன் பெர்லுஸ்கோனி உறவு வைத்துக் கொண்டது ஒரு வழக்காக உள்ள நிலையில், இந்த குற்றத்தை மறைக்க ரூபிக்கு பெர்லுஸ்கோனி பணம் கொடுத்தது புதிய வழக்காகியுள்ளது. இந்த வழக்கு ஏப்ரல் 6ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

பெர்லுஸ்கோனியிடம் பணம் வாங்கிக் கொண்ட பின்னர், அவருடன் நான் அப்படி இருக்கவில்லை என்று ரூபி மறுத்து வருகிறார். பெர்லுஸ்கோனியும் தான் ரூபியுடன் உறவு கொள்ளவில்லை என்று கூறி வருகிறார்.

ஆனால் இருவரும் 13 முறை உறவு வைத்துக் கொண்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.

மேலும் பெர்லுஸ்கோனியின் காமக் களியாட்டங்கள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அவருக்குச் சொந்தமான பங்களாவில் இரவு நேரங்களில் நடக்கும் விருந்துகளில் தாறுமாறாக நடந்து கொள்வாராம் பெர்லுஸ்கோனி. ஆபாச நடனங்கள், ஆடை அவிழ்ப்பு நடனங்கள் என களை கட்டுமாம். சில நேரங்களில் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பாராம் பெர்லுஸ்கோனி. சில நேரங்களில் பல பெண்களுடன் ஜமாய்ப்பாராம்.

பெர்லுஸ்கோனிக்கு ஆள் பிடித்துக் கொடுத்ததாக தற்போது சிக்கலில் மாட்டியுள்ள லீலே மோரா, டிவி தொகுப்பாளர் எமிலியோ பெடே, நிக்கோல் மினட்டி ஆகியோர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் நிக்கோல் ஒரு முன்னாள் கவர்ச்சி மாடல் அழகி ஆவார். தற்போது பெர்லுஸ்கோனி கட்சியில் இவர் ஒரு எம்.பியாக இருக்கிறார். கூடவே பெர்லுஸ்கோனியின் காதல் களியாட்டங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+