ஜெ பிரசாரம்: கோவையில் 5 தொகுதிகள் மிஸ்ஸிங், தொண்டர்கள் வருத்தம்
கோவை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோவையில் 5 தொகுதிகளில் பிரசாரம் செய்யமாட்டார் என்று தெரிகிறது. இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விடுபட்டுள்ள 5 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் தேர்தல் சுற்றுப்பயணத் திட்டத்தை ஜெயலலிதா மாற்றியமைக்கமாட்டாரா என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பு.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தின் முதல் பட்டியலை வெளியிட்டிருந்தார். இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை உள்ளிட்ட 5 தொகுதிகள் இல்லை.
கோவை என்றாலே அது அதிமுகவின் கோட்டை என்று சொல்வதற்கு இந்த தொகுதிகளில் அக்கட்சி தொடர் வெற்றி வெறுவது தான் காரணம். அதிமுக தொடங்கிய காலம் முதல் இன்று வரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தேர்தல் சுற்றுப் பயணப் பட்டியலில் இத்தொகுதிகள் இடம் பெற்றதே இல்லை என்று கட்சியினர் ஆதங்கபப்டுகின்றனர்.
கடந்த 1977-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நடந்த 8 சட்டசபை தேர்தல்களில் பொள்ளாச்சித் தொகுதியில் அதிமுக 7 முறை வெற்றி பெற்றது.
கிணத்துக்கடவு தொகுதியில் 5 முறை அ.திமுகவும், 1991-ம் ஆண்டு தேர்தலில் அதன் கூட்டணிக் கட்சியும் வென்றன. உடுமலை தொகுதியிலும் அதிமுக 5 முறை வெற்றி வாகை சூடியுள்ளது.
வால்பாறை தொகுதியில் 1977, 1989, 1991 தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. வால்பாறை மலைப்பகுதிக்குச் சென்று எந்த தலைவரும் பிரசாரம் செய்வதில்லை. அடிவாரத்தோடு பிரசாரத்தை முடித்துக் கொள்வார்கள்.
ஜெயலலிதா பொள்ளாச்சியில் பிரசாரம் செய்யும்போது வால்பாறை தொகுதி அதிமுகவினர் அங்கு வந்து பிரசாரத்தில் கலந்து கொள்வது வழக்கம்.
ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத் திட்டத்தை வகுப்பதில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதிமுக கோட்டையாக கருதப்படும் தொகுதிகள் ஏன் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணப் பட்டியலில் இல்லை என்பதே புரியவில்லை என்கின்றனர் அதிமுகவினர்.
தற்போது கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பிரச்சனை இழுத்துக் கொண்டே போவதால் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரம் திட்டமிட்டபடி துவங்கமுடியாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அவ்வாறு செய்தால் விடுபட்டுள்ள 5 தொகுதிகளிலும் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று அத்தொகுதிகளைச் சேர்ந்த அதிமுகவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications