For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோபிச்செட்டிப்பாளையம்-கொமுக வேட்பாளரை எதிர்த்து திமுக நிர்வாகி போட்டி

By Siva
Google Oneindia Tamil News

கோபி: கோபி சட்டசபை தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான கொமுகவை எதிர்த்து கோபி ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோபி பஞ்சாயத்து யூனியன் கலிங்கியம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பரிமளா. திமுகவைச் சேர்ந்தவர். இவரது கணவர் வெங்கடாசலம் கோபி ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார்.

கோபி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு திமுக தலைமையிடம் வெங்கடாசலம் விருப்ப மனு கொடுத்திருந்தார். ஆனால், கோபி தொகுதி திமுக கூட்டணி கட்சியான கொமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் வேட்டுவ கவுண்டர் சமூதாயத்தை அனைத்து கட்சிகளும் புறக்கணித்து விட்டதாகக் கூறி, வேட்டுவ கவுண்டர் சமூதாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தனித்து போட்டியிட முடிவு செய்தனர்.

இதனையடுத்து, வேட்டுவ கவுண்டர் சமூதாய சங்க வேட்பாளராக வெங்கடாசலம் அறிவிக்கப்பட்டார். அதன்படி வெங்கடாசலம் சுயேச்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

அதே போல் அவரது மனைவியும், கலிங்கியம் பஞ்சாயத்து தலைவியுமான பரிமளமும் சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்தார்.

இந்த சம்பவம் திமுக, கொமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Kongunadu Munnetra Kazhagam which is in DMK alliance contests from Gobichettipalayam. In the mean while, a DMK functionary named Venkatachalam has filed nomination for the same constituency as an independent candidate. Like wise, his wife Parimala, a DMK panchayat president has also filed nomination as an independent candidate against the party's wishes. This makes both DMK and KMK people lose their temper.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X