For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவையில் தொடங்கி திருவாரூர் வரை கருணாநிதி 11 நாள் பிரசாரம்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் கருணாநிதி தனது 2வது கட்ட பிரசாரத்தை வருகிற 30ம் தேதி கோவையில் தொடங்குகிறார். ஏப்ரல் 11ம் தேதி வரை அவர் 11 நாட்களுக்குப் பிரசாரம் செய்கிறார். திருவாரூரில் கடைசி 2 நாட்கள் அவர் பிரசாரம் செய்யவுள்ளார்.

முதல்வர் கருணாநிதி தனது முதல் கட்டப் பிரசாரத்தை முடித்துள்ளார். திருவாரூரில் போட்டியிடும் அவர் அங்கு தனது பிரசாரத்தைத் தொடங்கினார். பின்னர் தஞ்சாவூர், திருச்சியிலும் அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து முதல்வரின் 2வது கட்டப் பிரசாரத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் கருணாநிதி மார்ச் 30ம் தேதி கோவையில் பிரசாரத்தைத் தொடங்குகிறார். 31ம் தேதி ஈரோட்டில் அவர் பிரசாரம் செய்கிறார்.

ஏப்ரல் 1ம் தேதி சேலம், 2ம் தேதி வேலூர், 4ம் தேதி வட சென்னை, 5ம் தேதி தென் சென்னை, 6ம் தேதி மதுரை, 8ம் தேதி திண்டிவனம் மற்றும் விழுப்புரம், 9ம் தேதி புதுச்சேரி மற்றும் கடலூரில் பிரசாரம் செய்கிறார்.

ஏப்ரல் 10ம் தேதியும், 11ம் தேதியும் அவர் திருவாரூரில் பிரசாரம் செய்து அங்கேயே தனது பிரசாரத்தை முடித்துக் கொள்கிறார்.

English summary
CM Karunanidhi will begin his 2nd phase camapaign tour on March 30 from Coimbatore. He will tour Erode, Salem, Vellore, North Chennai, South Chennai, Madurai, Tindivanam, Villupuram, Puducherry, Cuddalore and end his campaign in Thiruvarur on April 11.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X