தமிழகத்தை சுற்றி முடித்த விஜயகாந்த் ரிஷிவந்தியத்தில் 4 நாள் தீவிரப் பிரசாரம்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு தனது தொகுதியான ரிஷிவந்தியத்தில் பிரசாரம் செய்கிறார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். அவர் பேசும் இடமெல்லாம் புதுப் புது சர்ச்சைகள் கிளம்பின. தற்போது தனது தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். ரிஷிவந்தியத்தில் விஜயகாந்தை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவராஜ் போட்டியிடுகிறார்.
கடந்த மாதம் 24-ம் தேதி முதல் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பரிசாரம் செய்து வருகிறார். ரிஷிவந்தியத்தில் கடந்த 24-ம் தேதி மட்டும் தான் பிரசாரம் செய்தார்.
அவருக்கு ஆதரவாக தேமுதிக இளைஞர் அணி செயலர் சுதீஷ், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் ரிஷிவந்தியத்தில் 3 நாள் பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை தனக்கு வாக்கு சேகரிக்கவிருக்கிறார்.
விஜயகாந்தை தோற்கடிக்க திமுக கூட்டணி வகுத்துள்ள வியூகத்தை உடைக்க திட்டமிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் பெரிய டெம்போ டிராவலர் வாகனத்தில் பிரசாரம் செய்த அவர் ரிஷிவந்தியத்தில் தெருத் தெருவாக அலைவதற்காக சிறிய ஜீப்பில் செல்கிறாராம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications