தமிழகத்தில் மாற்றம் ஏற்படுவது காலத்தின் கட்டாயம்-தா.பாண்டியன்
திருநெல்வேலி: தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம், காலத்தின் கட்டாயம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
நெல்லை டவுனில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தா.பாண்டியன் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம். இலங்கை பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து போரை நிறுத்துமாறு வலியுறுத்தினோம். ஆனால் அவர் உள்நாட்டு பிரச்சினையில் இந்தியா தலையிட முடியாது என்றார். இந்த பிரச்சனைக்கெல்லாம் தி.மு.க. அமைச்சர்கள் விலகுவார்கள் என்று கருணாநிதி அறிவிக்க வில்லை.
இலவச கலர் டி.வி.க்காக 2230 கோடி செலவு செய்துள்ளனர். இவையனைத்தும் மக்கள் வரிப்பணம் தான். ஆனால் கேபிள் டி.வி. இணைப்புகள் மூலம் மாதந்தோறும் ரூ.400 கோடி பெறுகின்றனர். 1 வருடத்துக்கு ரூ.4800 கோடி கிடைக்கிறது.
சட்டமன்ற தேர்தலுக்குபின்னர் இந்த நிலை மாறிவிடும். திருச்சியில் இருந்து கரூர் இடையே தினமும் 8 ஆயிரம் லோடு மணல் அள்ளப்படுகிறது.
இது தவிர தாமிரபரணி, பாலாறு, வைகை ஆறுகளிலும் மணல் அள்ளப்படுகிறது. நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு நடந்துள்ளது. இவற்றையெல்லாம் தகவல் உரிமை சட்டத்தில் கேட்டறிந்து விவரங்களை சேகரித்து வைத்துள்ளோம். தேர்தலுக்கு பின்னர் இவற்றை வழக்காக தொடுக்க தயாராக உள்ளோம்.
எந்த மாநிலத்திலும் முதலமைச்சரின் மனைவி, பேரன்கள் பற்றி யாரும் பேசியதில்லை. இங்குதான் பேச வேண்டியுள்ளது. தங்கள் குடும்பத்தை காப்பாற்றும் இயக்கமாக தி.மு.க.வை மாற்றி விட்டார்கள். தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா மீது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 80 ஆயிரம் பக்கத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.2-வது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படும் என்கிறார்கள்.
கருணாநிதி தி.மு.க. தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்கிறார். இதனால் கதாநாயகன் ராசா மீதான குற்றபத்திரிகைதான். இந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி உடன்கட்டை ஏறும் நிலை ஏற்படும். மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்பது அவர்களது கனவுதான். தமிழகத்தில் நல்லாட்சி மலர அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார் தா.பாண்டியன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications