பூத் சிலிப்புகளை எடைக்கு போட்ட அங்கன் வாடி ஊழியர் சஸ்பெண்ட்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் பூத் சிலிப்புகளை மளிகை கடையில் எடைக்கு போட்ட அங்கன் வாடி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முன்பெல்லாம் அரசியல் கட்சிகள் பூத் சிலிப் வழங்கி வந்தன. இம்முறை தேர்தல் ஆணையமே வழங்குகிறது. இதற்கென்று அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சங்கரன்கோவில்லி பூத் சிலிப்புகள் வழங்க 34 அங்கன் வாடி ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதில் திருநீலகண்ட ஊரணி அருகில் உள்ள சத்துணவு கூடத்தில் சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமியிடம் வாக்காளர்களிடம் கொடுக்கச் சொல்லி பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டன. அவர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு பதில் நேராக மளிகை கடைக்கு சென்று எடைக்குப்போட்டுள்ளார்.
இது குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து முதன்மை உதவி தேர்தல் அதிகாரி சந்திரசேகரன், உதவி தேர்தல் அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் சம்மந்தப்பட்ட மளிகை கடைக்குச் சென்று பூத் சிலிப்புகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications