தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி... கோபத்தில் வாக்களிக்க மறுத்த மக்கள்!
சென்னை: தேர்தல் பார்வையாளர்கள் செய்த அனாவசிய கெடுபிடி காரணமாக பல வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க மனமின்றி கோபத்துடன் சென்றனர்.
இந்தியாவில் வேறு எந்தத் தேர்தலின்போதும், எந்த மாநிலத்திலும் காட்டாத கெடுபிடிகளை தமிழகத்தில் மட்டும் காட்டி வருகின்றனர் தேர்தல் அதிகாரிகள். இவர்களின் தொல்லையால் ரொக்கமாக ரூ 10 ஆயிரம் கூட வெளியில் எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
இன்னொரு பக்கம், இன்று வாக்குப் பதிவு ஆரம்பித்த பிறகு வாக்குச் சாவடிகளின் அருகில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு முறை அந்தப் பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்குச் செல்லும்போதும் போலீசாரும் தேர்தல் பார்வையாளர்களும் காட்டும் கெடுபிடியால் வாக்குவாதம் முற்றி சண்டையாகும் அளவுக்குப் போகிறது.
சென்னை மற்றும் புறநகர் வாக்குச்சாவடிகள் பலவற்றில் வாக்களிக்க வந்த மக்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் கெடுபிடிகளால் கடுப்பாகி வாக்களிக்காமலே சென்ற கொடுமையும் இன்று காலையில் நடந்தது.
வாக்களிக்க வரும் பெண்கள் மற்றும் ஆண்களை நான்கைந்து இடங்களில் சோதனை செய்கின்றனர்.
"கிட்டத்தட்ட குற்றவாளிகளைப் போலவே நடத்துகின்றனர். இது மக்களுக்கான தேர்தல்... மக்கள்தான் இந்த தேர்தலில் எஜமானர்கள் என்பதை அடியோடு மறந்து தேர்தல் ஆணையத்துக்காக தேர்தல் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர்...", என்றார் இந்தக் கெடுபிடியால் மகா கோபத்திலிருந்த ஒரு வாக்காளர்.
பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகமிருக்கும். இந்தப் பகுதிகளில் வாக்குச் சாவடிகளும் அமைந்துள்ளதால், பயணிகளும், மார்க்கெட்டுக்கு வருவோரும் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர். வாகனத்தில் சற்று தூரமாக வரும்போதே, போலீசார் விசிலை ஊதி போ போ என விரட்டும் கோமாளித்தனத்தை என்னவென்று சொல்வது.. அந்த வாகன ஓட்டிகள் வேறு எங்குதான் செல்வார்கள்?!
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications