தேமுதிகவினர் மீது திமுகவினர் தாக்குதல்: 'கைகட்டி நிற்கும் காவல் துறை'- விஜயகாந்த்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்னரும் நமது கூட்டணிக் கட்சியினரை தொடர்ந்து திமுகவினர் தாக்கி வருகிறார்கள். குறிப்பாக பல இடங்களில் தே.மு.தி.கவைச் சேர்ந்த இளைஞர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு, ஜெயபால், அவரது மனைவி பிரசன்ன குமாரி, தம்பி சுகந்தராஜ் ஆகியோர் தி.முகவைச் சேர்ந்தவர்களால் அரிவாள் மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கரத் தாக்குதலில் ஜெயபால் மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். வேடசந்தூர் தொகுதியில் உள்ள சேவுகவுண்டச்சிபட்டியில் தே.மு.தி.கவினரை தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த வன்முறையாளர்கள் தாக்கியதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சோழிங்கநல்லூர் தொகுதியில் நன்மங்கலம் பகுதியில் தே.மு.தி.க. கிளைச் செயலாளர் வசந்தவேலு வீட்டை தாக்கியதோடு மட்டுமல்லாமல், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் தே.மு.தி.க. நெசவாளர் அணி செயலாளராக செயல்பட்டு வந்த அசோகன் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும், அவரது இரண்டு பிள்ளைகளுக்கு படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளேன்.
காரைக்கால் தெற்கு தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட அசனா சொந்த வீட்டிலிருந்த போது தி.மு.கவைச் சேர்ந்த கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட தோழர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும், தாக்கியவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்து வழக்கு தொடுக்கவும், மேற்கொண்டும் கொலை வெறித்தாண்டவம் நடைபெறாமல் இருக்க தே.மு.தி.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் பாதுகாப்பு கேட்டால் உடனடியாக பாதுகாப்பு அளிக்கவும் தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இன்றைய காவல்துறை ஏன் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. இப்பொழுதாவது சட்டப்படி செயல்பட காவல்துறைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆகவே தயவு தாட்சண்யமின்றி மக்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் தேர்தல் கமிஷனும் முறையே ஆணைகளை பிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications