கடியப்பட்டினம் கடலில் மூழ்கிய கப்பலில் டீசல் அகற்றும் பணி இன்று துவக்கம்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கடியப்பட்டினம் கடல் பகுதியில் மூழ்கிய பனாமா நாட்டு கப்பலில் இருந்து டீசல் எடுக்கும் பணி இன்று துவங்கியுள்ளது.

குமரி மாவட்டம் கடியப்பட்டணம் கடலில் கடந்த 29-ம் தேதி பனாமா நாட்டு சரக்கு கப்பல் ஒன்று பாறையில் மோதி நின்றது. இந்த கப்பலில் தண்ணீர் புகுந்ததால் கடலில் மூழ்கியது. இதனால் கப்பலில் இருந்த 25500 டன் இருப்பு தாது கடலில் கலந்து 3 கிமீ தூரத்திற்கு வடமேற்காக பரவியதால அந்த பகுதியில் கடல் சிவப்பு நிறமாக மாறியது.

மேலும் கப்பலில் இருந்து கசியும் டீசலால் சுற்றுச்சூழல் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஹாலந்து நாட்டில் இருந்து டீசலை உறிஞ்சும் கருவிகள் நேற்று காலை சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன. மீட்பு கப்பல் உதவியுடன் இன்று டீசலை எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். கடலில் குறிப்பி்ட்ட அளவு்க்கு மேல் டீசல் பரவினால் அதனை உறிஞ்சி அகற்றவோ அல்லது ஆயில் டிஸ்போஸபில பவுடர் போடவோ நடவடிக்கை எடுக்கப்படும் என கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+