நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு. சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமியின் மகன் இவர்.
1996ல், சக மாணவர் ஜான் டேவிட்டால் கொடூரமாக கொல்லப்பட்டார் நாவரசு. இந்த வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜான் டேவிட் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததன் பேரில், விடுதலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில், தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஜான் டேவிட்டுக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சரியாக ஆராயவில்லை என்றும் கண்டித்தது.
இதற்கிடையே, ஜான் டேவிட் பாதிரியாராக வெளிநாட்டில் பணியாற்றுவதாகக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜான் டேவிட்டை கைது செய்ய கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் சிதம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கரூருக்கு விரைந்தனர்...
இதில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், தலைமை போலீசார் ரவி, வேல்முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ஜான்டேவிட்டின் சொந்த ஊரான கரூரை அடுத்த வெங்கமேட்டிற்கு வந்தனர். பின்னர் வெங்கமேட்டில் ஜான் டேவிட் வீட்டுக்குச் சென்றனர். ஆனால் ஜான்டேவிட்டின் தந்தை டாக்டர் டேவிட் மாரிமுத்து, தாய் டாக்டர் எஸ்தரின் லட்சுமி ஆகிய 2 பேரும் வீட்டில் இல்லை. வீடு பூட்டப்பட்டிருந்தது.
அவர்களுடைய வீட்டின் கீழ் தளத்தை பி.எஸ்.என்.எல்.அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் பி.எஸ்.என்.எல். ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் ராமநாதன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் எட்டு போலீசார் அடங்கிய தனிப்படையினர் சென்னையில் ஜான் டேவிட் தாயார் தங்கியிருந்த இடத்தில் விசாரணை நடத்தினர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேடப்பட்டு வந்த கொலையாளி ஜான் டேவிட் சரணடைந்தார்.
கடலூர் மத்திய சிறையில் அவர் தாமாக முன்வந்து சரணடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications