உதவியாளர் கொலை வழக்கு: தேவைப்பட்டால் ராதிகா செல்வியிடம் விசாரணை!
நெல்லை: முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் உதவியாளர் பாபுராஜ் கொல்லப்பட்ட வழக்கில் தேவைப்பட்டால் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களைத் தடுக்கவும், கொள்ளையர்களை பிடிக்கவும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் தொடர் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ள திசையன்விளை அருகேயுள்ள மணலிவிளையைச் சேர்ந்த ஜெபமணி சாமுவேலும், அவரது மகன் எசேக்கியலும் (24) கைது சொய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 212 கிராம் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளி நகைகள் மீட்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3லட்சத்து 21 ஆயிரம் ஆகும்.
இது தவிர தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சீகம்பட்டியில் என்ஜினியர் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.
அதே போல நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள சீவலார்குளத்தில் உள்ள அமைச்சர் பூங்கோதை குடும்பத்தினருக்கு சொந்தமான ஆலடி அருணா நர்சிங் கல்லூரியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் உதவியாளர் பாபுராஜ் கொலை வழக்கில் சம்பந்தபட்டுள்ள 6 நபர்களை கைது செய்துள்ளோம்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேவைப்பட்டால் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியிடம் விசாரணை நடத்தப்படும்," என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications