ஏர் இந்தியா விமானிகள் ஸ்டிரைக் நீடிக்கிறது-பயணிகள் கடும் அவதி
டெல்லி: ஏர் இந்தியாவின் பைலட்டுகள் ஸ்டிரைக் இன்று 5வது நாளாக தொடர்ந்து நீடித்தது. இதனால் ஏர் இந்தியாவின் 90 சதவீத விமானங்கள் இன்று ஓடவில்லை. இதையடுத்து பயணிகள் அவதி மேலும் அதிகரித்துள்ளது.
800 ஏர் இந்தியா விமானிகள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
தங்களது நிலையில் விமானிகள் உறுதியாக உள்ளதால் பிரச்சினை வலுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று வேலைநிறுத்தம் 5வது நாளை எட்டியது.
இதனால் 90 சதவீத ஏர் இந்தியா விமானங்கள் ஓடவில்லை. பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பல்வேறு மாற்றுத் திட்டங்களை நாங்கள் தொடர்ந்து வருகிறோம். நாடு முழுவதும் இன்று 40 விமான சேவைகளுக்குத் திட்டமிட்டுள்ளோம். சில பகுதிகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின், போயிங் 737 ரக விமானங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
ஏர் இந்தியா விமானிகளின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாட்டின் அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் பயணிகள் முடங்கிப் போயுள்ளனர்.
இதற்கிடையே, விமானிகளின் ஸ்டிரைக் குறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் வயலார் ரவி விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், மொத்தம் 1600 விமானிகள் உள்ளனர். இவர்கள் ஆண்டுக்கு ரூ. 800 கோடி அளவுக்கு சம்பாதிக்கின்றனர். இவர்களில் பலர் வெறும் பிளஸ்டூ படித்தவர்கள்தான். பட்டதாரிகள் கூட கிடையாது. இவர்களுக்கு மாதம் ரூ. 3.8 லட்சம் வரை சம்பளமாக கிடைக்கிறது. இவர்கள் என்ன பட்டினியில், பஞ்சத்திலா அடிபட்டுள்ளார்கள் என்று ஆத்திரத்துடன் கேட்டுள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications