ஜார்க்கண்ட்-மாவோயிஸ்ட் நக்டலைட் தாக்குதலில் 11 ஜவான்கள் பலி
ராஞ்சி: மாவோயிஸ்ட்கள் நடத்திய திடீர் தாக்குதலில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 சிஆர்பிஎப் வீரர்கள் உள்பட 11 வீரர்கள் பலியாகியுள்ளனர்.
லோஹர்தாகா மாவட்டம், தர்தாரியா கிராமத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
சிஆர்பிஎப் வீரர்கள் தவிர 3 உள்ளூர் போலீஸாரும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர். மொத்தம் 11 பேர் பலியாகியுள்ளதாக கடைசியாக கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. சிஆர்பிஎப் வீரர்கள் சிலர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவர்களை நிலக்கண்ணிவெடி மூலம் நக்சலைட்கள் தாக்கினர்.
அதன் பின்னர் மறைவிடங்களிலிருந்து போலீஸாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நக்சலைட்கள் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல் இல்லை. சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸார் விரைந்துள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications