நெருப்பாய் தகிக்கும் வெயில்... வெறுப்பைக் கிளப்பும் பவர் கட்!!

குறிப்பாக சென்னை, வேலூர் போன்ற வட மாவட்டங்களில் நெருப்பாய் தகிக்கிறது வெயில். அதற்கேற்ப கிராமப் பகுதிகளில் குறைந்தபட்சம் 5 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் உச்சகட்ட வெறுப்பில் உள்ளனர் மக்கள்.
வெயிலுக்குப் புகழ்பெற்ற வேலூருக்கு இன்னொரு பெயர் 'வெயிலூர்'!
கோடை காலத்தின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. முதல் நாளே 105.1 டிகிரி வெயில் அளவு வேலூரில் பதிவானது. 2-வது நாள் 106 டிகிரி வெயில் அடித்தது. 3-வது நாளான நேற்று 108 டிகிரி கொளுத்தியது. இன்றும் 108 டிகிரி வெயில் தொடர்கிறது.
நேற்றும் இன்றும் இங்கு 108 டிகிரியைத் தாண்டியது வெயிலின் அளவு. தார்ச் சாலைகள் உருகி நெளியும் அளவுக்கு இங்கு வெயில் உக்கிரம் காட்டி வருகிறது. இதனால் சாலையில் மக்களால் நடமாடவும் முடியவில்லை. சாலைகள் வெறிச்சோடிவிட்டன. கடைகளில் வியாபாரம் டல்லடித்தது. ஏசி ஷோரூம்களைவிட்டு வெளியேற மனமின்றி தயங்கியடி நின்றனர் மக்கள்.
இளநீர், தர்பூசனி, நுங்கு, மோர் மற்றும் குளிர்பான கடைகளில் மட்டும் கூட்டம் அலைமோதியது.
திருச்சி, நெல்லை, சென்னை போன்ற இடங்களிலும் கடுமையாகக் கொளுத்தியது வெளியில். சென்னையில் நேற்று 106 டிகிரியும், இன்று 105 டிகிரியும் வெயிலடித்தது.
மணிக்கணக்கில் பவர் கட்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்வதால் 700 மெ வா அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மின் வெட்டு தொடர்கிறது. வேலூர் போன்ற மாவட்டங்களில் கிராமப்புறங்களில் 6 மணி நேரம் வரை கூட மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சென்னையில் பராமரிப்பு என்று காரணம் கூறி குறிப்பிட்ட மண்டலங்களில் 8 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதும் நடக்கிறது.
ஒரு பக்கம் வெயில் கொடுமை, மறுபக்கம் மின்சாரம் துண்டிப்பு என இரட்டை அக்னி நட்சத்திர எஃபெக்டில் தவிக்கிறது தமிழகம்!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications